Pair of Vintage Old School Fru
Tamil Full Movie




e5fa6e54-9b43-4822-accd-63cc91c24eb4_S_secvpf


மும்பையை கலக்கும் பயங்கர தாதா பகவான். கூலிக்கு கொலைகள் செய்கிறான். மந்திரி தம்பியையும் போட்டு தள்ளுகிறான். அவனை என்கவுண்டரில் சுட்டு தள்ள போலீஸ் வலை விரிக்கிறது.

கிராணைட் குவாரி சகோதரர்களின் கறுப்பு பணத்தை கொள்ளை அடித்து வெளிநாட்டில் பதுங்கிய ஆதி, உருவத்தில் பகவானைப்போல் இருப்பது அவனது காதலிக்கு தெரியவருகிறது. அவனைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்து என்கவுன்டரில் சாகடித்து விட்டு பகவான் செத்து விட்டதாக நாடகம் நடத்தி பகவானை தப்பிக்க வைக்க அவள் திட்டமிடுகிறாள்.

இதற்காக வெளிநாடு போய் ஆதியை சந்தித்து அவனை காதல் வலையில் வீழ்த்துகிறாள். பிறகு அவனை மும்பை அழைத்து வருகிறாள். திட்டமிட்டபடி போலீசை வரவழைத்து அவர்கள் கையில் ஒப்படைத்து விட்டு மாயமாகிறாள்.

ஆதியை பகவான் என நினைத்து போலீஸ் சித்ரவதை செய்கிறது. என்கவுன்டரில் சாகடிக்கவும் முயற்சிக்கின்றனர். அதில் இருந்து தப்பினானா என்பது மீதி கதை…

ஆதி-பகவான் என இரு வேடங்களில் வருகிறார் ஜெயம்ரவி. இதில் பகவான் கேரக்டரில் உதட்டுக்கு சாயம், கண்ணுக்கு மை பூசி பெண்மை கலந்த நளினத்தில் வசிகரிக்கிறார். ரவுடிகளை பெண்மை சாயலில் சிரித்துக் கொண்டே அடித்து துவம்சம் செய்வது பொறி.

பாங்காக்கில் கொள்ளையடித்த பணத்தில் கோடீஸ்வர வாழ்க்கை நடத்தும் ஆதி வேடத்தில் ஸ்டைல் காட்டுகிறார். கிளைமாக்சில் இருவருக்கும் நடக்கும் சண்டையில் ஹாலிவுட் மிரட்சி.

தாதாவின் காதலியாக வரும் நீது சந்திரா வில்லத்தனத்தில் செஞ்சுரி அடிக்கிறார். ஆதி ஜெயம் ரவியை உருகி காதலிப்பதும் மும்பை வந்ததும் ஆக்ரோஷமாக இன்னொரு முகம் காட்டுவதும் பகீர். சண்டையிலும் அசுரத்தனம்…

போலீஸ் அதிகாரி அனிருத், கடத்தல் கும்பல் தலைவன் பாபு ஆண்டனி, ஜெயம் ரவி தாயாக வரும் சுதாசந்திரன், கேரக்டர்களும் வலு சேர்க்கின்றன. மென்மையான கதைகள் கொடுத்த இயக்குனர் அமீர் ஆக்ஷனிலும் அமர்க்களபடுத்தமுடியும் என நிரூபித்துள்ளார்.

ஆரம்ப காட்சிகள் அழுத்தம் இன்றி நகர்ந்தாலும் பகவான் வரவுக்கு பிறகு திகில் திருப்பங்கள் அதிரடி ஆக்ஷனில் கதை வேகம் பிடிக்கிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தோடு கட்டிப்போடுகிறது. தேவராஜின் கேமரா பாங்காக் மும்பை நகரங்களின் அழகை அள்ளுகிறது.